தலையிடிக்கு மேல் தலையிடி சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் குமார் சங்கக்கார..!

14வது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினுடைய பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள குமார் சங்கக்கார மிகுந்த சிக்கல் நிலையை எதிர்நோக்கியுள்ளார்.

அந்த அணியின் முன்னணி வீரரான பென் ஸ்டோக்ஸ் உபாதைக்கு உள்ளானார், இதனை தொடர்ந்து கொரோனா சிக்கல் நிலைமை காரணமாக இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டன் விலகுவதாக அறிவித்தார், அதனைத் தொடர்ந்து ஜொப்ரா ஆர்ச்சர் உபாதை காரணமாக விளையாட முடியாத நிலைமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு உருவானது.

இந்த மூன்று பேரின் உபாதையைத் தொடர்ந்து நான்காவது வெளிநாட்டு வீரரான அன்றூ ரை விலகுவதாக அறிவித்துள்ளார். இப்போதைய நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து கொரோனா அச்சம் காரணமாக வெளியேறுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணத்தால் குமார் சங்ககார பணிப்பாளராக இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களிடம் கைவசம் இருக்கும் நான்கு வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே தொடர்ச்சியான அத்தனை ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஸ்தாபிஜூர் ரஹ்மான், பட்லர் , டேவிட் மில்லர், கிரிஸ் மொரிஸ் ஆகியோரே ராஜஸ்தான் அணியிடம் உள்ள வெளிநாட்டு வீர்ர்களாவர்.