ஐபிஎல் ஏலம் வருகின்ற 18ம் திகதி சென்னையில் இடம்பெறும் என்று இந்திய கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது .
இதன் அடிப்படையில் ஐபிஎல் ஏலத்தில் தங்களுடைய பெயர் விபரத்தை 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர் 61 வீரர்களுக்கான இடத்திற்கு 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதிலே வெளிநாட்டு வீரர்கள் 283 பேரும் அடங்குகின்றனர். அதிகபட்சத் தொகையான இந்திய ரூபாய் 2 கோடி அடிப்படை விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் வீரர் கேதார் யாதவ் மற்றும் ஹர்பஜன் சிங் பஞ்சாப் அணியின் மக்ஸ்வெல் ஸ்டீவ் ஸ்மித், மொயின் அலி உள்ளிட்ட பல வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அடிப்படை விலை 20 லட்சத்திற்கும் ,புஜாரா 50 லட்சத்திற்கும் ,போட்டி தடை விதிக்கப்பட்டு மீளவும் திரும்பியிருக்கும் ஸ்ரீசாந்த் 75 லட்சம் ஆகவும் அடிப்படை விலையை நிர்ணயித்துள்ளனர்.