தல டோனிக்கு சொந்தமாகும் இன்னுமொரு சாதனை…!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான டோனி இன்றைய போட்டி மூலமாக புதிய சாதனை ஒன்றுக்கும் சொந்தக்காரராகியுள்ளார்.

பாஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டி சென்னை அணித்தலைவர் டோனியின் 200 வது போட்டியாக அமைந்துள்ளது.

IPL மற்றும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் அடங்கலாக டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் 200 வது போட்டியாக அமைந்துள்ளது.

சென்னை அணிக்காக அதிக போட்டியில் விளையாடிய வீரர்கள் விபரம்.

200 – டோனி
190 – ரெய்னா
132 – ஜடேஜா
121 – அஸ்வின்
114 – பத்ரிநாத்

#PBKSvCSK