தல தோனியின் இறுதிநேர அதிரடியில் முதல் அணியாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!

தல தோனியின் இறுதிநேர அதிரடியில் முதல் அணியாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!

14வது ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான இறுதிப்போட்டிக்கு தேரவாகும் முதல் அணியை தேர்வு செய்யும் குவாலிபயர் போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பான்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையிலான இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றியை தனதாக்கியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை டெல்லிக்கு வழங்கினார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இவர்களது துடுப்பாட்டத்தில் முதல் 4 விக்கெட்டுகள் 80 ஓட்டங்களுக்குள் இழக்கப்பட்டன, ஆரம்ப வீரர் மிகச்சிறப்பாக பிரிதிவ் ஷா 34 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார் .

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் ரிஷாப் பான்ட் மற்றும் ஹெட்மையர் ஆகியோர் அபாரமான 83 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி 172 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது

173 எனும் இமாலய இலக்குடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பம் அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கவில்லை, பிளசிஸ் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில் மூன்றாம் இலக்கத்தில் ஆடுகளம் புகுந்து ரொபின் உத்தப்பா 63 ஓட்டங்களை அதிரடியாக பெற்றார், 13.3 ஓவர்கள் நிறைவில் ரொபின் உத்தப்பா ஆட்டம் இழக்கின்ற வரையில் போட்டி சென்னை பக்கமே அதிகமாக இருந்தது.

ருத்ராட்ஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் இணைந்து அதிரடியில் மிரட்டினர்.

4 ம் இலக்கத்தில ஆச்சரியமாக ஷர்துல் தாஹூர் ஆடுகளம் வந்தார் ,முதல் பந்தில் அவர் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ராயுடுவும் ரன் அவுட் மூலமாக நடையைக்கட்ட போட்டி டெல்லி பக்கம் செல்ல தொடங்கியது.

4 ஓவர்களில் 44 ஓட்டங்கள் தேவை என்ற ஓர் இக்கட்டான நிலைமை வந்தது, பின்னர் 3 ஓவர்களில் 35 ஓட்டங்களும் 2 ஓவர்களில் 24 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்தபோது அவேஸ் கானின் பந்துவீச்சில் மிகச் சிறப்பாகக் ஆடிக்கொண்டிருந்த கெய்க்வாட் 70 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.

தோனி ஆடுகளம் வந்த போது அப்போது சென்னை அணிக்கு 11 பந்துகளில் 24 ஓட்டங்கள் தேவையாக இருந்தது, இறுதியில் தல தோனி 6 பந்துகளில் ஆட்டமிழக்காது 18 ஓட்டங்கள் பெற்றுக்கொடுக்க தோனியின் இறுதிநேர அதிரடியில் சென்னை அணி அபார வெற்றியைத் தனதாக்கி முதல் அணியாக இறுதிப் போட்டியை எட்டியது.