திசர பெரேராவின் தலைமைக்கு இன்னுமொரு மகுடம் -சாம்பியனான இராணுவ அணி..!

SLC மேஜர் கிளப்கள் T20 இறுதிப் போட்டியில் திசர பெரேரா தலைமையிலான இராணுவ அணி சாம்பியனானது..!

ஶ்ரீலங்கா கிரிக்கெட் ஏற்பாடு செய்து நடத்திய கழகங்களுக்கிடையிலான MajorClubsT20 தொடரில் திசர பெரேரா தலைமையிலான SL Army SC கழகம் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6 ஆண்டுகளுக்கு பிறகு #MajorClubsT20 பட்டத்தை கைப்பற்றியது ?️?️

கோல்ட்ஸ் கழகத்திற்கு எதிராக முதலில் ஆடிய SL Army SC அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது.

 

சீக்குகே பிரசன்னா 29, அஷான் ரந்திக 22, யசோதா மெண்டிஸ் 21 ஓட்டங்கள் பெற்றனர், பந்துவீச்சில்  தனஞ்சய லக்ஷன் 3/25, முதித லக்ஷன் 2/18, சாமோத் பட்டேஜ் 2/29)

பதிலளித்த கோல்ட்ஸ் கழகம் 18.3 ஓவர்களில் 94 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.  சங்கீத் குரே 38, அவிஷ்க பெரேரா 16 ஓட்டங்கள் பெற்றனர்.

பந்துவீச்சில் சீக்குகே பிரசன்ன 3/17, லக்ஷான் எதிரிசிங்க 3/19, யசோதா மெண்டிஸ் 1/12, கயான் பண்டார 1/13, அசேல குணரத்ன 1/17)

SLC #MajorClubsT20 போட்டித் தொடரின் சிறப்பு விருதுகள் ?

?️ சாம்பியன்கள் – இராணுவம் விளையாட்டு கழகம்

? 2 வது இடம் – கோல்ட்ஸ் கழகம்

? போட்டியின் சிறந்த வீரர் – அஷான் ரந்திகா (இராணுவ SC) -Player of the tournament ?

? சிறந்த பேட்ஸ்மேன் – சங்கீத் குரே (கோல்ட்ஸ் CC) -Best batsman

? சிறந்த பந்து வீச்சாளர் – அகில தனஞ்சய (கோல்ட்ஸ் CC) -Best bowler

? இறுதி போட்டியின் சிறந்த ஆட்டக்காரர் – சீக்குகே பிரசன்னா (இராணுவ SC) -Player of the finals

ஶ்ரீலங்கா கிரிகெட் ஏற்பாடு செய்த நடத்தும் LPL போட்டிகளில் ஏற்கனவே திஸர பெரேரா தலைமையிலான அணி தொடர்ச்சியாக இரண்டு தடவைகளும் கிண்ணத்தை சுவீகரித்திருக்கும் நிலையில் திஸர பெரேராவின் தலைமையில் இன்னுமொரு கிண்ணமும் இப்போது வென்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


நமது YouTube தளத்துக்கும் செல்லுங்கள் ?