திடீரென ஒதுங்க நினைக்கும் முஷ்பிகுர் ரஹீம் -பங்களதேஷ் பயிற்சியாளர்கள் தகவல் ..!
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீர்ருமாக திகழும் முஷ்பிகுர் ரஹிம் இனிவரும் காலங்களில் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் விக்கெட் காப்பாளர் பணியை தொடர விரும்பவில்லை என தெரிவித்திருக்கிறார்.
இந்த தகவலை பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஈஎஸ்பிஎன் cricinfo விடம் தெரிவித்தார்.
வங்காளதேச தலைமை பயிற்சியாளர் ரசல் டொமிங்கோ, முஷ்பிகுர் ரஹீம் இனி விளையாட்டின் குறுகிய வடிவத்தில் (ODI,T20) விக்கெட் கீப்பிங் செய்ய விரும்பவில்லை என்ற தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
எங்கள் திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது ஆட்டத்திற்குப் பிறகு விக்கட் கீப்பிங் பணியை தொடர விரும்பவில்லை என என்னிடம் சொன்னார், எனவே நாங்கள் நூருல் ஹசன் சோஹன் மீது கவனம் செலுத்த வேண்டும் என டொமிங்கோ கூறினார்.
பங்களாதேஷ் அணி, நியூசிலாந்து அணியுடனான 3வது T20 போட்டியில் நேற்று தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.