திடீரென மனம் மாறிய டேவிட் வார்னர் -கோல்டன் டக்காகி அசிங்கப்பட வீடியோவை பாருங்கள் …!
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலமாக play off போட்டியில் இப்போது தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளதுடன், புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.
நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆரம்ப வீர்ர்கள் சப்ராஸ் கான் மற்றும் வோர்னர் ஆகியோர் தயாரானபோது முதல் பந்து வீசுவதற்கு லிவிங்ஸ்டன் சுழற்பந்து வீச்சாளர் தயாரானார்.
இந்த நிலையில் சுழற்பந்து எதிர்கொள்வதற்காக சப்ராஸ் கான் ஆயத்தமாகி கொண்டிருக்க, திடீரென மனம் மாறிய டேவிட் வோர்னர் அவரை மறுமுனைக்கு அனுப்பிவிட்டு அந்த முதல் பந்தை தானே எதிர்கொள்வதற்கு முற்பட்டார்.
இவர் எடுத்த திடீர் முடிவு தவறானதாக அமைந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
டேவிட் வோர்னர், லிவிங்ஸ்டன் வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் முறை மூலமாக ஆட்டமிழந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் வரலாற்றில் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் வோர்னர் Golden Duck ஆனார், இரண்டு சந்தர்ப்பங்களும் பஞ்சாப் அணிக்கு எதிராகவே அமைந்திருக்கிறது.
இந்த #IPL2022 உடன் அணிகளிலிருந்து கழற்றிவிடப்படவுள்ள முக்கிய வீரர்கள்….!
வீடியோவை பாருங்கள் ?
— Ruturaj (@RuturajRulez) May 16, 2022