இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீர்ர் அஞ்சலோ மத்தியூஸ், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக இலங்கை கிரிக்கெட்டுக்கு ஸ்ரீ லங்கா தெரிவித்துள்ளார்.
தற்போது தான் ஓய்வு குறித்து ஆலோசித்து வருவதாகவும், எதிர்வரும் வாரங்களில் தனது முடிவை தெரிவிப்பதாகவும் 34 வயதான மத்தியூஸ் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு தெரிவித்ததாக எஸ்.எல்.சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்வாளர்கள் ஒரு இளம் அணியுடன் செல்ல முடிவு செய்த பின்னர், அஞ்சலோ மத்தியூஸ் ஒருநாள், T20 ஆட்டங்களுக்கு உள்வாங்கப்படவில்லை.
2019 உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட பங்களிப்பை மத்தியூஸ் கொடுத்திருந்தாலும் இப்போது மத்தியூஸ் ஓரம்கட்டப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.
2018 ஆம் ஆண்டில் சராசரியாக 52.50 மற்றும் 2017 இல் 63.66 ஆக இவரது துடுப்பாட்ட சராசரி காணப்பட்டது.
புதிய ஒப்பந்த புள்ளிகள் முறைமை தொடர்பாக மத்தியூஸ் மற்றும் பல சிரேஸ்ட கிரிக்கெட் வீரர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
தேர்வுப் புறக்கணிப்பு மற்றும் ஒப்பந்த விவகாரம் ஆகியன மத்தியூஸ் எனும் சிறந்த சகலதுறை வீரரின் திடீர் ஓய்வு முடிவுக்கு காரணமாக பேசப்படுகின்றது.