திடீர் ஓய்வை அறிவித்த பங்களாதேசின் முன்னணி சகலதுறை வீரர் …!
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான மஹ்மதுல்லா திடீரென டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஜிம்பாப்வே மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது மிக அபாரமான முறையில் ஆட்டமிழக்காது 150 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட மஹ்மதுல்லா ,போட்டி இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே தான் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கு விடைகொடுப்பதாக அறிவித்தார்.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள மஹ்மதுல்லா , பங்களதேஷ் அணிக்காக 50 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 2914 ஓட்டங்களையும் 43 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
5 சதம் 16 அரைச் சதங்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
திடீரென அவருடைய ஓய்வு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் தான் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் கவனம் செலுத்த இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காது அற்புதமான 150 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதோடு அவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்வுக்கு விடைகெடுக்கின்றமை முக்கியமானது.