தினேஷ் கார்த்திக்கை மீண்டும் கிரிக்கெட் பக்கம் அழைக்கும் ரோஹித் சர்மா…!

தினேஷ் கார்த்திக்கை மீண்டும் கிரிக்கெட் பக்கம் அழைக்கும் ரோஹித் சர்மா…!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் காப்பாளருமான தினேஷ் கார்த்திக்கை மீண்டும் கிரிக்கெட் பக்கம் திரும்ப ரோஹித் சர்மா அழைத்துள்ளார்.

2019 உலக கிண்ண போட்டிகளுக்கு பின்னர் தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய தேசிய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகின்றது.
இதனால் அவர் வர்ணனையாளர் பணியையும் முன்னெடுத்து வருகின்றார்.

ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரின் இறுதி போட்டியில் கார்த்திக் வர்ணனையாளராக புதிய அவதாரம் மேற்கொண்டு ரசிகர்கள் பலரது பாராட்டுதலுக்கும் ஆளாகியுள்ளார்.

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக்கிற்கு இன்னும் கிரிக்கெட் வாழ்க்கை மீதமிருக்கிறது என்பதை இந்திய வீரர் ரோஹித் சர்மா அவருக்கு நினைவுபடுத்தியுள்ளார்.

அதனை தினேஷ் கார்த்திக்கும் ஏற்றுக்கொண்டு சமூக வலைத்தள பதிவொன்றை இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.