தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணியில் மீண்டும் நடராஜன்.

இந்தியாவில் இடம்பெறும் 50 ஓவர்கள் கொண்ட விஜய் ஹசாரே தொடருக்கான தமிழக அணியின் விபரம் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அணியின் தலைவராக 35 வயதான தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.அவுஸ்திரலிய சுற்றுப்பயணத்தில் இந்திய தேசிய அணியில் கலக்கி தற்போது ஓய்வில் இருக்கும் நடராஜன் தமிழ்நாடு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆயினும் அஷ்வின், வோஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய தேசிய அணியோடு பயணிப்பதால் அணியில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

14 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாடு அணி சாயிட் முஷ்டாக் அலி இருபது இருபது தொடரில் சாம்பியன் பட்டம் வென்றமை சுட்டிக்காட்டத்தக்கது.