தினேஷ் கார்த்திக் தொடர்பில் இந்திய தேர்வாளர்களுக்கு அறிவுரை கூறும் சுனில் கவாஸ்கர்…!

தினேஷ் கார்த்திக் தொடர்பில் இந்திய தேர்வாளர்களுக்கு அறிவுரை கூறும் சுனில் கவாஸ்கர்…!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் இந்திய தேர்வுக் குழுவினருக்கு தன்னுடைய அறிவுரையை கொடுத்துள்ளார் .

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள டி20 உலகக்கிண்ண போட்டிக்கான அணி தேர்வு எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பில் கருத்துரைத்துள்ளார்.

இப்போது ஐபிஎல் போட்டிகளில் அதிரடியில் மிரட்டும் தினேஷ் கார்த்திக் இந்திய தேர்வு குழு பரிசீலிக்க வேண்டும் என குறிப்பிட்ட கவாஸ்கர், கார்த்திக்கின் வயதை (36) பொருட்படுத்தாது அவருடைய அதிரடியை கவனத்திற்கொண்டு அணியில் இணைக்கப்பட வேண்டும் என சுனில் கவாஸ்கர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் 6,7 ம் இலக்கங்களில் துடுப்பெடுத்தாடுவதற்கு பொருத்தமான ஒருவராக தினேஷ் கார்த்திக் இருப்பார் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.