தினேஷ் கார்த்திக் மீண்டும் தேசிய அணிக்கு வருவதற்கான கதவு திறக்கப்பட்டுள்ளது, SA தொடருக்கான அழைப்பு …!
தொடர்ந்து சிறப்பாக செயல்படும் அனைவருக்கும் கதவு திறந்தே உள்ளது. டி20 உலகக் கோப்பைக்கு முன் எங்களிடம் சில தொடர்கள் உள்ளன, கார்த்திக் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் அவர் தேசிய அணியின் தேர்வுக்கு பரிசீலிக்கப்படுவார் என இந்திய தேர்வுக்குழு கருதுகிறது.
தென்னாப்பிரிக்கா தொடருக்கான அணியை தேர்வாளர்கள் அறிவிக்கும் போது, தினேஷ் கார்த்திக் இந்திய தேசிய அணியில் இடம்பெறக்கூடும் என செய்திகள் கிடைத்துள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தனது நிலையான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார் கார்த்திக்.
பிசிசிஐயின் தேர்வுக் குழு உறுப்பினர்களில் ஒருவர், கார்த்திக்கின் முன்னேற்றத்தைக் கண்காணித்து வருவதாக இந்திய இணையத்தளம் ஒன்றிடம் தெரிவித்தார்.
உலகக்கிண்ண போட்டிகளுக்கான இந்தியாவின் பினிஷராக தினேஷ் கார்த்திக் விளையாடுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த தென்ஆபிரிக்க அணியுடனான தொடருக்கு தினேஷ் கார்த்திக்கை அழைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நம்பகமான செய்திகள் வெளியாகியுள்ளன.
Dinesh Karthik in IPL 2022:
vs PBKS: 32* off 14
vs KKR: 14* off 7
vs RR: 44* off 23
vs MI: 7* off 2
vs CSK: 34 off 14
vs DC: 66* off 34
Runs: 197
Average: 197
Best: 66*
Strike Rate: 209.57
இதேநேரம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் இந்திய தேர்வுக் குழுவினருக்கு தன்னுடைய அறிவுரையை கொடுத்துள்ளார் .
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள டி20 உலகக்கிண்ண போட்டிக்கான அணி தேர்வு எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பில் கருத்துரைத்துள்ளார்.
இப்போது ஐபிஎல் போட்டிகளில் அதிரடியில் மிரட்டும் தினேஷ் கார்த்திக் இந்திய தேர்வு குழு பரிசீலிக்க வேண்டும் என குறிப்பிட்ட கவாஸ்கர், கார்த்திக்கின் வயதை (36) பொருட்படுத்தாது அவருடைய அதிரடியை கவனத்திற்கொண்டு அணியில் இணைக்கப்பட வேண்டும் என சுனில் கவாஸ்கர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் 6,7 ம் இலக்கங்களில் துடுப்பெடுத்தாடுவதற்கு பொருத்தமான ஒருவராக தினேஷ் கார்த்திக் இருப்பார் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.