தினேஸ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு கிண்ணம் வென்று அசத்தியது .

  • இந்தியாவில் இடம்பெற்ற சாயிட் முஷ்டாக் அலி T20 தொடரில் இறுதிப் போட்டியில் மோதும் பரோடா மற்றும் தமிழ்நாடு அணிகள் இந்த ஆண்டுக்கான தொடரில் எந்த ஒரு குழுநிலை போட்டியிலும் தோல்வியை தழுவாத நிலையில் இறுதிப் போட்டியில் மோதின ?

கடந்த ஆண்டு இறுதிப் போட்டிக்கு தெரிவாகி ஒரு ஓட்டத்தால் கர்நாடகா அணியிடம் கிண்ணத்தை தவறவிட்ட தினேஸ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி , இன்றைய போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி கிண்ணத்தை தனதாக்கியது .

முதலில் பரோடா அணிக்கு துடுப்பெடுத்தாட சந்தர்ப்பம் கிடைத்த நிலையில் பரோடா அணி சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தின் காரணமாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

முதல் 6 விக்கெட்டுகள் 36 ஓட்டங்களுக்குள் பறிக்கப்பட்டன ஆயினும் 7வது விக்கட்டில் அரைச்சத இணைப்பாட்டம் பெறப்பட்ட நிலையில் பரோடா அணி கௌரவமான 120 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

தமிழ்நாடு சார்பாக மணிமாறன் சித்தாத் 20 ஓட்டங்களுக்கு 4 இலக்குக்களைச் சாய்த்தார்.

121 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தமிழ்நாடு அணி போட்டியில் 18 ஓவர்கள் நிறைவில் 3 வெக்டர்களை இழந்து
இலகுவான வெற்றியை தனதாக்கி சையிட் முஷ்டாக் அலி இருபதுக்கு இருபது தொடரின் கிண்ணத்தை வரலாற்றில் இரண்டாவது தடவையாக தனதாக்கியது.

அனுபவ தமிழ்நாட்டு வீரர்களான அஸ்வின், நடராஜன், வருண் சக்கரவர்த்தி, வாசிங்டன் சுந்தர் மற்றும் விஜய் சங்கர் இல்லாத நிலையில் களமிறங்கி அசத்தலான வெற்றியை பெற்றிருக்கின்றது தமிழ்நாடு அணி.

ஆட்டநாயகனாக மணிமாறன் சித்தாத் தெரிவானார்.

இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு காரணம் ஆயினர். ஐபிஎல் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து இன்னும் அதிக சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தொடரில் 364 ஓட்டங்களைக் குவித்த தமிழ்நாட்டின் ஜெகதீசன் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்களில் முதல் இடத்தைப் பிடித்தார்.