திமுத்திடம் மீண்டும் தலைமைத்துவம் -தசுன் ஷானகவை நீக்க தீர்மானித்துள்ளதாக முன்னணி பத்திரிகை தகவல்…!

இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் பதவியில் இருந்து தசுன் ஷானகவை நீக்க தீர்மானித்துள்ளதாக முன்னணி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.!

தசுன் ஷனக தற்போது 50 ஓவர்கள் மற்றும் டி20 கிரிக்கெட் வடிவங்களில் இலங்கை அணியை வழிநடத்தி வருகிறார். பல இளம் வீரர்களைக் கொண்டு, இலங்கைக்கு கிரிக்கெட்டில் உண்மையிலேயே பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்பதை அண்மைக்காலத்தில் இலங்கை அணியால் நிரூபிக்க முடிந்தது.

கடந்த ஒருநாள் உலகக் கோப்பையைப் போலவே மேற்கிந்திய தீவுகள் – வங்கதேசம் இடையிலான ஒருநாள் தொடரிலும் இலங்கை அணி முன்னேற்றம் கண்டுள்ளது.

திமுத் தலைமையில் இலங்கை 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இலங்கை அணி 10 போட்டிகளில் வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.

இதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் இரு அணிகளும் ஒரே கேப்டனின் கீழ் இயங்க வேண்டும் என திமுத்தின் தலைமைப் பொறுப்பு தசுன் ஷனக்கவிடம் ஒப்படைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், தசுனின் ஒருநாள் போட்டித் தலைவர் பதவி தற்போதைய டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்னவிடம் ஒப்படைக்கப்படும் என தி மோர்னிங் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

இலங்கையின் ஒருநாள் போட்டித் தலைவராக திமுத் மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், சர்வதேச இருபதுக்கு 20 அணித்தலைவராக மாத்திரமே தசுன் ஷனக செயற்படுவார் எனவும் அந்த நாளிதழ் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டித் தலைவர் பதவியில் இருந்து தசுன் ஷனகவை நீக்கிவிட்டு, திமுத் கருணாரத்னவை அணித்தலைவராகக் கொண்டு வருவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணித்தலைவர் ஷனகா மீதான நம்பிக்கையை இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் கைவிட்டுள்ளனர் என்பதே உண்மையானது.