திமுத் 5000 , திரிமான்ன 2000 , இலங்கை வலுவான நிலையில்…!

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2 வது போட்டியில் இலங்கை அணி பலமான நிலையை எட்டியுள்ளது.

முதல் நாள் நிறைவில் இலங்கை அணி விக்கெட்டை மட்டும் இழந்து 291 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்றைய நாளில் இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன 118 ஓட்டங்களை பெற்று அட்டமிழந்தாலும், ஆரம்ப வீரர் லஹிரு திரிமான்ன ஆட்டம் இழக்காது 131 ஓட்டங்களை பெற்றதுடன், ஒஷாத பெர்னாண்டோ ஆட்டம் இழக்காது 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

இன்றைய நாள் நிறைவில் இலங்கை அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 291 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளமை சிறப்பமசமாகும்.

அணித்தலைவர் கருணாரத்ன இன்று தனது 72 வது டெஸ்ட்டில் 5000 ஓட்டங்களை பூர்த்தி செய்ததுடன் , லஹிரு திரிமான்ன 42 வது டெஸ்ட்டில் 2000 ஓட்டங்களையும் பூர்த்தி செய்தனர்.

அத்தோடு இந்த ஆண்டில் அதிக டெஸ்ட் ஓட்டங்களை பெற்றவர்கள் வரிசையில் ஜோ ரூட்க்கு அடுத்த நிலையில் திமுத் மற்றும், திரிமான்ன ஆகியோர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

101 , 114 , 209 என்று தொடர்ச்சியான 3 இன்னிங்ஸ்களில் இலங்கையின் ஆரம்ப ஜோடி சத இப்பட்டம் புரிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.