இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்னவுக்கு கொரோனா தோற்று உறுத்திப்படுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் நேற்றைய தினத்தில் இலங்கை அணியின் இளம் வீரர் சதீர சமரவிக்ரமவின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
இவரோடு இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, டிக்வெல்ல, ஒஷாத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.
இதைவிடவும் திரிமான்னவுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், நேற்று திருமண பந்தத்தில் இணைந்த சதீர சமரவிக்ரம தம்பதிகளும் கொரோனா தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக நேரிடலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.