திருகோணமலை புனித மரியாள் கல்லூரி மாணவிகள் இலங்கை தேசிய கால்பந்தாட்டஅணியில்..!

திருகோணமலை புனித மரியாள் கல்லூரி மாணவிகள் இலங்கை தேசிய 20 வயதுக்குட்பட்டோர் கால்பந்தாட்டஅணியில் 30 பேர் கொண்ட குழாமில் தெரிவாகியுள்ளார்..

கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமாகிய 4 ஆம் திகதி மற்றும் 5 ஆம் திகதி ஆகிய 3 நாட்கள் இடம்பெற்ற தொடர்ச்சியான தெரிவில் இருந்து 4 பேர் இறுதி 30 பேர் கொண்ட குழாமில் தெரிவாகியுள்ளார்கள்.

முதல் கட்ட தேர்வில் புனித மரியாள் கல்லூரி மாணவிகள் 8 பேர் பங்கு பற்றி இருந்தார்கள்

அதில் இருந்து நேற்று இடம்பெற்ற 3 ஆம் கட்ட 40 பேர் கொண்ட தேர்வில் 5 பேர் தெரிவாகி இருந்தார்கள்.

இன்று இடம்பெற்ற இறுதி தெரிவில் 30 பேர் கொண்ட குழாமில் 4 பேர் தெரிவாகியுள்ளர்கள்.

R. S. அபிஷேகா
K. டினோஷா
V. துஷிபா பெனினால்
T. குவேதா தேர்வாகியுள்ளார்கள்….

இந்த புனித மரியாள் கல்லூரி அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் N. M. பாத்தீ ( உடற்கல்வி ஆசிரியர்)

Previous article18 ஆண்டுக்கால கனவு.. என் இளமை, முழு வாழ்க்கையையும் ஆர்சிபிக்கு வழங்கினேன்.. விராட் கோலி
Next articleஇந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது;