திருக்கோணமலையில் புதிய கிரிக்கெட் மைதானம் திறந்து வைப்பு (படங்கள் இணைப்பு)

திருக்கோணமலையில் புதிய கிரிக்கெட் மைதானம் திறந்து வைப்பு (படங்கள் இணைப்பு)

ஸ்ரீ லங்கா  கிரிக்கெட்டின் ஏற்பாட்டில் திருகோணமலை மண்ணில் புதிய கிரிக்கெட் மைதானம் இன்றைந நாளில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப் பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தரப்பு அறிவித்துள்ளது.

திருகோணமலை மண்ணில் மிகப்பெரும் குறையாக இருந்த மைதானப்பிரச்சனை இன்று நிவர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மெக்கெய்ஷர் விளையாட்டு அரங்கை அண்மித்த பகுதிகளில் புதைபொருள்  சிக்கல் நிலைமை காரணமாக அந்த அரங்கம் புனரமைக்கப்படாத நிலையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

இந்த நிலையில் மெக்கெய்ஷர் மைதானத்தை அடுத்து இருக்கும் கோணேஸ்வரர் ஆலயம் செல்லும்  அந்த பகுதியில் புதிய கிரிக்கெட் மைதானம்  இன்றைய நாளில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதுவரை காலமும் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் மைதானத்தை மட்டுமே திருகோணமலையில் இருக்கும் கிரிக்கெட் கழகங்கள் தங்களது போட்டிகளுக்காக பயன்படுத்தி வந்த நிலையில் ,இப்போது இன்னுமொரு புதிய மைதானம் திருகோணமலை கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒழுங்கமைத்து கொடுத்தமை பாராட்டத்தக்க விடயம் எனலாம்.

படங்கள் – திருகோணமலை கிரிக்கட் சங்கம்.