திருந்திவிட்ட ஸ்மித்.. அவுட் கேட்டதை வாபஸ் வாங்கி நெகிழ வைத்த ஆஸ்திரேலியா.. என்ன நடந்தது
சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்காக என்ன வேண்டுமானாலும் ஆஸ்திரேலியா செய்யும் என்பதுதான் அவர்கள் மீதான இமேஜ் வெற்றி பெறுவதற்காக குறுக்கு வழியை கடைபிடிக்கும் ஆஸ்திரேலியா விதிகளுக்கு மீறி பல செயல்களை செய்து சிக்கி இருக்கிறது.
குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய கேப்டன் ஸ்மித் பந்தை சேதப்படுத்துவதற்காக பல மோசடிகளில் செய்து தடை கூட வாங்கி இருக்கிறார்.ஆனால் தற்போது அதே ஸ்மித் மீண்டும் ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டனாக களமிறங்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுகிறார்.
இந்த ஆட்டம் ஆஸ்திரேலியா அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய வெற்றி பெற்றால் ஐந்து புள்ளிகளுடன் அரையிறுதிக்கு சென்று விடுவார்கள். இல்லையெனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா தோற்க, ஆஸ்திரேலியா காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
இந்த தருணத்தில் ஆப்கானிஸ்தான் அணியும் பலம் குன்றிய அணி எல்லாம் கிடையாது. தற்போது அவர்கள் அதிரடியாக விளையாடி பெரிய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கின்றனர். இந்த சூழலில் தான் ஆப்கானிஸ்தான் அணி இறுதி கட்டத்தில் ரன்களை குவித்து வந்தது. ஆப்கானிஸ்தான அணி 47 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருந்தது.
அப்போது கடைசி பந்தில் அஸ்மதுல்லா உமர்சாய் ஒரு ரன் ஓடினார். அப்போது நூர் அகமத் விக்கெட் கீப்பர் திசையில் வந்து சேர்ந்து, ஓவர் முடிந்துவிட்டது என நினைத்து கிரீசை விட்டு வெளியே வந்தார். இதனை கவனித்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் இங்கிலீஷ், அவரை ரன் அவுட் செய்தார்.பின் இதற்கு நடுவருடம் அப்பில் கேட்டார். உடனே இது அவுட்டா இல்லையா என்பதை நடுவர்கள் பார்த்து சென்றனர்.
இதனை அறிந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், இந்த அப்பிலை திரும்ப பெறுவதாக கூறி நெகிழ்ச்சி அடைய வைத்தார். ஓவர் முடிந்துவிட்டது என நினைத்துதான் ஆப்கானிஸ்தான் வீரர் சென்றதாகவும் தாங்கள் விதியை பயன்படுத்தி ஏமாற்ற நினைக்கவில்லை என்பது போல் ஸ்மித் நடுவரிடம் சென்று அப்பிளை திரும்ப பெறுவதாக கூறினார். இதனை அடுத்து போட்டியை தொடர நடுவர்கள் அனுமதித்தனர். ஆஸ்திரேலிய வீரர் இங்கிலீஷ் செய்த தவறை சரி செய்து மீண்டும் நூர் முஹம்மத் விளையாட ஸ்மித் அனுமதித்தது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.