திருமலை இந்துக் கல்லூரியில் திலக்சன் ஞாபகார்த்த கிரிக்கெட் தொடர்…!

திருகோணமலையில் மீண்டும் நான்கு முன்னணிப் பாடசாலைகளுக்கு இடையில் கிரிக்கெட் சமர் (21.08.2022)

இதன் ஆரம்பநிகழ்வு இன்று காலை 8.30மணிக்கு வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.பிரதம விருந்தினராக திரைமலை வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்

50 ஓவர்களைக் கொண்ட இச்சுற்றுப்போட்டியானது இந்துக்கல்லூரி பழைய மாணவனும், இந்துக்கல்லூரி கிரிக்கெட் குழுவின் முன்னைநாள் தலைவருமான மறைந்த பிரபாகரன் திலக்‌ஷன் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது நண்பர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இச்சுற்றுப் போட்டியின் முதல்போட்டியில்  (21.08.2022) இந்துக்கல்லூரியை எதிர்த்து விவேகானந்தா கல்லூரி விளையாடவுள்ளது.

இரண்டாவது போட்டியில் 26.08.2022 (வெள்ளி) அன்று சென்.ஜோசப் கல்லூரியை எதிர்த்து விபுலானந்தா கல்லூரி விளையாடவுள்ளது.

இப்போட்டிகளில் வெற்றிபெறும் இரண்டு அணிகளும் இறுதிப்போட்டியில் 28.08.2022 (ஞாயிறு) அன்று விளையாடவுள்ளனர். இப்போட்டிகள் யாவும் இந்துக்கல்லூரி மைதானத்திலேயே நடைபெறவுள்ளது.

இப்போட்டிகள் யாவும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைய இருப்பதனால் அனைவரையும் வருகைதந்து ஆதரவு வழங்கும்படி அன்புடன் அழைக்கின்றார்கள் இதன்
ஏற்பாட்டுக் குழுவினர்.