இந்திய கிரிக்கெட் அணியில் அண்மையில் அறிமுகமான தமிழகத்தின் நடராஜன் பற்றியே எல்லா ஊடகங்களும் பேசிக்கொண்டிருக்கின்றன.
அவுஸ்திரேலியாவுக்கு வலைப் பந்து வீச்சாளராக சென்ற நடராஜனுக்கு அதிஷ்டம் கைகொடுக்க அனைத்துவகையான போட்டிகளிலும் அறிமுகமாகி இந்திய தேசத்தின் ஒட்டு மொத்த பார்வையையும் தனதாக்கினார்.
அதன்பின்னர் நடராஜன் வாழ்க்கை வரலாறை படமாக்க பலர் முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்.
அது குறித்து நடராஜன் கருத்துக் பகிர்ந்துள்ளார்.
ஏராளமான இயக்குனர்கள் என்னுடைய வீடு தேடி வருகிறார்கள், என் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்க அனுமதி கோருகிறார்கள்.
ஆனால் எனக்கு அதிலெல்லாம் நாட்டமில்லை, என் குறிக்கோள் எல்லாமே இப்போதைய நிலையில் கிரிக்கெட் மட்டுமே என்று நடராஜன் தெரிவித்துள்ளார்.