துடுப்பாட்டத்தில் தொடர்ந்து சொதப்பும் மேற்கிந்திய தீவுகள், தொடரை வென்றது அவுஸ்திரேலியா..!

துடுப்பாட்டத்தில் தொடர்ந்து சொதப்பும் மேற்கிந்திய தீவுகள், தொடரை வென்றது அவுஸ்திரேலியா..!

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

ஒருநாள் தொடரை இலகுவான முறையில் 2-1 என அவுஸ்திரேலிய அணி கைப்பற்றி அசத்தியது.

முன்னதாக நிறைவுக்கு வந்து twenty20 தொடரை 1_4 என பறிகொடுத்த ஆஸ்திரேலியா, அதன் பின்னர் வந்த ஒருநாள் தொடரில் மிகச் சிறப்பாக சாாதித்து தொடர் வெற்றியை தனதாக்கியது.

நேற்று இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் 45.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.லூயிஸ் 55 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பலம் பொருந்திய துடுப்பாட்ட வீரர்களை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அவுஸ்திரேலிய பந்து வீச்சுக்கு எதிராக ஓட்டங்களை குவிக்க முடியாது போனமை குறிப்பிடதக்கது.

154 எனும் இலகுவான இலக்கோடு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியாவிற்கு மத்தியூ வேட் அரைச்சதம் அடிக்க 37 ஆவது ஓவரில் இலகுவாக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலமாக போட்டி தொடரை 2-1 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

இந்தத் தொடர் முழுவதுமாக மிகச் சிறப்பாக பந்து வீசிய ஜொலித்த ஸ்டார்க் 3 போட்டிகளில் மொத்தம் 11 விக்கெட்டுகளை அள்ளினார் என்பதும் கவனிக்கத்தக்கது.

இதைவிடவும் மேற்கிந்திய தீவுகள் இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் துடுப்பாட்டத்தில் பெருமளவில் சோபிக்க வில்லை என்பது அவர்கள் ரசிகர்களுக்கு பெருத்த கவலையாகும்.

மேற்கிந்திய தீவுகள், அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் நிறைவுக்கு வருகிறது .

T20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியும், ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும் வென்றிருக்கின்றன.

அடுத்து அவுஸ்திரேலியா, பங்களாதேஷ் நோக்கி புறப்பட தயாராகிறது, இது மாத்திரமல்லாமல் மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான அடுத்த தொடர் ஆரம்பிக்கவுள்ளது.

Aston agar Strac