துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட இலங்கையின் திலான் சமரவீர ..!

துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட இலங்கையின் திலான் சமரவீர ..!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் ஆட்டக்காரரான திலான் சமரவீர, நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பங்களாதேஸ் சுற்றுப் பயணம் மற்றும் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு குறித்து தொடர்களுக்கான துடுப்பாட்ட பயிற்சியாளராக திலான் சமரவீர நியமித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த ரங்கன ஹேரத் பங்களாதேஸ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளராக செய்யப்பட்டு அந்த அணிக்கு வெற்றிகள் பலவற்றை தேடி கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் திலான் சமரவீரவும் நியூஸிலாந்தின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளமை  சிறப்பம்சமாகும் .

ஹத்துருசிங்க பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்ட காலத்தில் திலான் சமரவீர பங்களாதேஷில் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயற்பட்டவர், அதுமாத்திரமல்லாமல் 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட பயிற்சியாளராக இலங்கை  கிரிக்கெட்டில் பதவி வகித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது

இலங்கையின் பல்வேறு திறமையாளர்கள் வெளிநாடுகளில் தேசிய கிரிக்கெட் அணிகளுக்கு பயிற்சி கொடுத்துவரும் நிலை தொடர்கிறது, ஆனால் ஸ்ரீலங்கா கிரிக்கெட் மட்டும் இலங்கை வீரர்களை பயன்படுத்தத் தவறி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

Thilan samaraweera