துடுப்பு மட்டையால் தினேஷ் கார்த்திக் முகத்தில் பளார் விட பார்த்த பாண்ட்- அதிஷ்டத்தால் தப்பித்த தினேஷ் கார்த்திக்..! ( வீடியோ இணைப்பு )

துடுப்பு மட்டையால் தினேஷ் கார்த்திக் முகத்தில் பளார் விட பார்த்த பாண்ட்- அதிஷ்டத்தால் தப்பித்த தினேஷ் கார்த்திக்..! ( வீடியோ இணைப்பு )

 டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான பரபரப்பான இன்றைய போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் தொடரின் முதல் பாகத்தில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்தது, இரண்டாம் பாகத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்றுவரும் இந்த தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த தருணத்தில் இன்று போட்டியில் ஒரு சுவாரசியமான சம்பவம் பதிவானது, குறிப்பாக வருன் சக்கரவர்த்தி, பான்டுக்கு பந்துவீசி கொண்டிருந்தபோது, அந்த பந்தை அடிக்க முனைந்தார் பான்ட், ஆனால் பந்து சரியான கோணத்தில் செல்லவில்லை, துடுப்பில் பட்ட பந்து மீண்டும் ஸ்டம்ப்ஸை தகர்க்க முற்பட்டபோது  அந்த பந்தை துடுப்பால் தட்டிவிட ரிஷப் பான்ட் முனைந்தார்.

அந்த தருணத்தில் தினேஷ் கார்த்திக்கின் முகம் அருந்தப்பாக தப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது, சில வேளைகளில் கொஞ்சம் தப்பி இருந்தால் தினேஷ் கார்த்திக்கின் முகத்தில் பளார் என்று விட்டிருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோ இணைப்பு ????