துனித் வெல்லாலகேவுக்கு லசித் மலிங்க வழங்கிய அருமையான பரிசு ..!

துனித் வெல்லாலகேவுக்கு லசித் மலிங்க வழங்கிய அருமையான பரிசு ..!

இலங்கையின் இளம் அறிமுக வீர்ரான துனித் வெல்லாலகேவுக்கு இலங்கையின் வேகப்பந்து பயிற்சியாளர் மாலிங்க ஓர் சிறப்பு பரிசை வழங்கி அவரை ஆச்சரியப்படுத்தினார்.

லசித் மலிங்காவின் அறிமுக ஆட்டத்திற்குப் பிறகு அவுஸ்ரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் மாலிங்கவுக்கு வழங்கியதை போன்று இலங்கை வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இலங்கைக்காக அறிமுகமான துனித் வெல்லலகேவிடம் அதை விடயத்தை செய்தார்.

முதல் விக்கட்டான ஸ்டீவ் ஸ்மித், அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் ஆரோன் பின்ச், நடுவர்கள் குமார் தர்மசேன மற்றும் ரவீந்திர விமலசிறி ஆகியோரிடம் மாலிங்க பந்தில் கையொப்பம் பெற்றுக்கொண்டார்.

அதன்பின்னர் மைதானம் , அறிமுக திகதி எல்லாவற்றையும் எழுதிய பந்தை வெல்லாலகேவுக்கு நினைவுப் பரிசாக கையளித்துருந்தமை குறிப்பிடத்தக்கது.

YouTube தளத்துக்கு பிரவேசியுங்கள் ?