துஷ்மந்த சமீரவை அணிக்கு அழைக்கும் நிர்ப்பந்தத்தில் ஆர்சிபி- விரைவில் எதிர்பார்க்கலாம்..!
இலங்கையின் பிரபல வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்த சமீரவை, ஆர்சிபி அணி இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டிகளுக்கு ஒப்பந்தம் செய்திருந்தது.
ஆனாலும் இது வரைக்கும் எந்தவொரு போட்டியிலும் ஆர்சிபி அணி சார்பில் துஷ்மந்த சமீர இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை.
இலங்கையின் மற்றுமொரு வீரரான ஹசரங்க இரண்டு போட்டிகளில் விளையாடினார், பின்னர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட நிலையில், துஷ்மந்த சமீர RCB அணியில் இணைக்கப்பட வேண்டும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக ஆர்சிபி அணி, இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடிவரும் போட்டிகளில் முக்கிய முதல் 6 ஓவர்களில் (Power Play) விக்கெட்டுகளை வீழ்த்த தடுமாறுகிறது.
இந்த நிலையில் துஷ்மந்த சமீர வை, டானியில் கிரிஸ்டியன் அல்லது கார்டன் ஆகியோரக்கு பதிலாக அணியில் சேர்க்க வேண்டிய தேவையும் நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆர்சிபி விளையாடிய போட்டிகளில் பவர் பிளே ஓவர்களில் நிலமை வருமாறு ????
49-0
56-0
56-0
59-0
56-0
Power Play ஓவர்களில் துஷ்மந்த சமீர விக்கெட்டுகளை வீழ்த்த வல்லவர் என்ற காரணத்தால், ஆர்சிபி அவரை இணைத்துக்கொள்ளுமாக இருந்தால் அது அவர்களுக்கு மிகப் பெரிய பலத்தை கொடுக்கும் என்பதே ரசிகர்களதும் கிரிக்கெட் ஆர்வலர்களதும் கருத்தாகும்.
இன்று இடம்பெற்ற பஞ்சாப் அணியுடனான போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்று மூன்றாவது அணியாக Play off வாய்ப்பை உறுதிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது .
ஏற்கனவே சென்னை, டெல்லி ஆகிய அணிகளை தொடர்ந்து இப்போது பெங்களூர் அணி மூன்றாவது அணியாக Play off க்கு தேர்வாகியுள்ளது.