தூற்றிய வாய்களையே போற்ற வைக்க வேண்டும்- அதுதான் வாழ்வின் உச்சபட்ச சாதனை, கட் அவுட்டில் தொங்கும் கதை..!

தூற்றிய வாய்களையே போற்ற வைக்க வேண்டும்- அதுதான் வாழ்வின் உச்சபட்ச சாதனை, கட் அவுட்டில் தொங்கும் கதை..!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய வேகப்பந்து வீச்சாளராக மிளிர்ந்து கொண்டிருக்கும் மொஹமட் சிராஜ் அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்களில் பாராட்டிப் பேசப்படும் ஒரு நபராக காணப்படுகின்றார் .

ஆர் சி பி ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவரும் சிராஜ்,  பல சந்தர்ப்பங்களில் ஓட்டங்களை வாரி வழங்கியமைக்காக இவர் மிகப் பெருமளவில் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டார் .

Dinda Academy யின் மற்றுமொரு பந்துவீச்சாளர் என சீண்டும் அளவிற்கு ரசிகர்கள் இவரை கேலி செய்தனர்.

ஆனால் அதே வாய்களையே இன்று வெகுவாக புகழ்ந்து தள்ளும் அளவிற்கு இந்திய டெஸ்ட் அணியின் முக்கியமான நட்சத்திரமாக மின்னுகிறார் சிராஜ்.

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மொத்தம் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தவர் சிராஜ்.

இதன்பின்னரே தன்னுடைய சொந்த ஊரான ஹைதராபாத்தில் லோர்ட்ஸ் வெற்றிக்கு காரணமான சிராஜ் இன் புகைப்படம் கட்டவுட்டாக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நம்மை தூற்றும் வாய்களையே விரைவாக போற்ற வைக்க வேண்டும், அதுதான் வாழ்வின் உச்சபட்ச சாதனை .

அந்த சாதனையை விரைவிலேயே எட்டிப் பிடித்திருக்கிறார் சிராஜ்.