தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் வரலாறு படைத்தது இலங்கை அணி..!

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் வரலாறு படைத்தது இலங்கை அணி..!

இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க அணிக்கு இலங்கை அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்தது.

இன்று 3 வது போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 2 – 1 என கைப்பற்றியதுடன், 8 ஆண்டுகளுக்குப் பின்னர் தென் ஆபிரிக்காவை ஒருநாள் தொடரில் வெற்றிகொண்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இலங்கை அணி மீது மேற்கொள்ளப்பட்ட ஏராளமான விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் எல்லாவற்றையும் துடைத்தெறிந்து தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணி வெற்றி வாகை சூட ஆரம்பித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடனான தொடரில் காட்டிய அசாத்திய திறமை, அதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்காவுடனான தொடரையும் இலங்கை அணி கைப்பற்றி அசத்தியமை குறிப்பிடத்தக்கது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் 9 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, இன்று அணிக்கு சந்திமால் மீளத்திரும்பினாலும் ஏமாற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி வைத்தியங்கள் இலங்கையின் வேகப்பந்து வீச்சுக் கூட்டணி அரங்கேற்றியது.

விரைவாகவே 22 ஓட்டங்களுக்கு 3, 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் இழக்கப்பட்டன, பின்னர் மழை போட்டியை தாமதப்படுத்தியது, இறுதியில் மீண்டும் ஆரம்பித்த போட்டியில் தென் ஆப்ரிக்கா 125 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

3 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் முதலாவது, மூன்றாவது போட்டிகளில் வெற்றி பெற்ற இலங்கை தொடரை 2-1 என கைப்பற்றி சாதித்துள்ளது.

?முதல் ஒருநாள் போட்டியில் ?? 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

?2 வது ஒருநாள் போட்டி  67 ரன்கள் வித்தியாசத்தில் ?? வெற்றி.

?3 வது ஒருநாள் போட்டி  78 ரன்கள் வித்தியாசத்தில் ?? வெற்றி

?? தொடரை 2️⃣-1️⃣ என வெற்றிி.

இன்று அறிமுகமான மகேஷ் தீக்ஷன எனும் அறிமுக வீரர் மிகச்சிறப்பாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், அதுமாத்திரமல்லாமல் தொடர் நாயகனாக மூன்று போட்டிகளிலும் மிகச்சிறந்து துடுப்பாட்டத்தில் பங்களித்த சரித் அசலங்க தேர்வானார்.