தென்னாபிரிக்காவிலும் கால்பதிக்கும் IPL ..!

ஒரு ஒருநாள் போட்டியை நடத்துவதற்கு மூன்று டி20 போட்டிகளை நிர்வாகங்கள் நடத்தி பணத்தை பாக்கெட்டில் போட்டுக்கொள்ள முடியும். அடுத்து வீரர்களுக்கும் பணிச்சுமை குறைவு. உடற்தகுதியைப் பேணுவதும் எளிது!

டெஸ்ட் போட்டி என்பதில் ஒருநாள் போட்டி போல, குறுகிய நேரத்தில் ஓய்வில்லாமல் உழைப்பை வீரர்கள் தர வேண்டியதில்லை.

அடுத்து வருமானத்திற்காக டி20 கிரிக்கெட் போட்டிகளை அதிகளவில் ஊக்குவித்து, ஒருநாள் போட்டிகளை ஆதரவுக்கு வைத்துக்கொண்டு, டெஸ்ட் போட்டிகளுக்கு ஆப்படித்தால், எழுகின்ற எதிர்ப்புகள் வீரியமாக இருக்கும். இதில் பலனைடையும் முதலாளிகளின் தொழில் நேக்குகள் பொதுவெளிக்கு வந்துவிடும்.

எனவே பாரம்பரிய கிரிக்கெட்டான டெஸ்ட் கிரிக்கெட்டை வைத்துக்கொண்டு, நவீன கிரிக்கெட் வடிவமான ஒருநாள் கிரிக்கெட்டை, இன்னொரு நவீன கிரிக்கெட் வடிவமான டி20க்காக பலியிடுவதுதான் எதிர்ப்பை குறைக்கும். அதுதான் புத்திசாலித்தனம். அந்தப் புத்திசாலித்தனம்தான் தற்போது மெல்ல மெல்ல நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது!

மேலும் உலகெங்கும் franchise டி20 லீக்குகள் முக்கியத்துவம் பெற்றுவரும் அதேவேளையில், இந்த லீக்கின் ருசியறிந்த இந்திய IPL முதலாளிகள் கரீபியன் டி20 லீக்கிற்கு அடுத்து, செளத்ஆப்பிரிக்கா டி20 லீக்கை முழுமையாக ஆக்ரமித்துள்ளார்கள். 2023 உலகக்கோப்பைக்கு நேரடியாக செளத்ஆப்பிரிக்கா தகுதிபெற, ஆஸ்திரேலியா சென்று மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவது அவசியமானது. ஆனால் செளத்ஆப்பிரிக்கா தனது நாட்டின் franchise டி20 தொடருக்காக ஆஸ்திரேலியா செல்லவில்லை. அந்தளவிற்கு இந்த லீக்குகளின் செல்வாக்கு கிரிக்கெட்டில் இருக்கிறது. அதாவது இந்த முதலாளிகளின் செல்வாக்கு!

இனி மெல்ல மெல்ல ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அதன் முக்கியத்துவத்தை இழக்கும். அதற்கான ஏற்பாடுகள் தீவீரமாக ஆரம்பித்துவிட்டது. இதை நியாயப்படுத்த புதுப்புது காரணங்களை முதலாளிகள் உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள். மாறாக யாருக்கும் எதற்கும் பாதிப்பில்லாத சரியான தீர்வுகளைக் கொண்டுவர விடமாட்டார்கள். ஒருபக்கமாய் தான் மட்டுமே சுரண்டும் வழியை மட்டுமே திறந்து வைப்பார்கள். அதில்தான் கிரிக்கெட் இனி போகும் வரும்!

இரு நாடுகளுக்கு இடையேயான டி20 தொடர்களை கைவிட்டு ஒருநாள் போட்டிகளை நடத்துவதுதான் யாருக்கும் பாதிப்பில்லாத தீர்வு. டி20 போட்டிகளுக்கு IPL மாதிரி தொடர்களும், Icc உலகக்கோப்பையும் போதுமானது. ஒருநாள் போட்டிகளுக்கு IPL மாதிரியான தொடர்கள் கிடையாது. ஆனால் இந்த வழியில் கிரிக்கெட் இயங்க விடமாட்டார்கள்!

Richards