தென்னாபிரிக்காவை வெளுத்து வாங்கிய பங்களாதேஷ் அணிக்கு காசுக் குவியல்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை வெற்றி கொண்டு சாதனை படைத்தமைக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் கிரிக்கெட் அணிக்கு பணப் பரிசில்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பங்களாதேஷ் அணிக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர் நிதியிணை பரிசாக வழங்குவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீர்மானம் மேற்கொண்டுள்ளது

தென் ஆப்பிரிக்காவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருந்த பங்களாதேஷ் அணி தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை  வெற்றிகொண்டு   வரலாறு படைத்தது.

இந்த நிலையிலேயே குறித்த சாதனையை பாராட்டும் வகையில்  பாரியளவிலான நிதியினை பரிசாக வழங்க பங்களாதேஷ் கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது.