போராடி அணிக்குள் மீண்டும் நுழைந்து சந்திமால், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 30 பேர் கொண்ட அணி விபரம்..!
இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில் வருகின்ற செப்டம்பர் மாதம் ஆரம்பமாகும் 6 மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கையின் உத்தேச அணி விபரம் வெளியாகியுள்ளது.
இலங்கையின் பிரபலமான சண்டே டைம்ஸ் நாளிதழ் இந்த 30 பேர் கொண்ட பட்டியலில் விவரத்தை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் சிரேஷ்ட வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்து வந்த தேர்வாளர்கள், இப்போது மீண்டும் சந்திமால் மற்றும் நுவான் பிரதீப் ஆகியரை அணிக்கு கொண்டுவந்தனர்.
பிரமோதய விக்கிரமசிங்க தலைமையிலான புதிய தேர்வுக்குழு, சந்திமால், மத்தியூஸ், திமுத் கருணாரத்ன, லக்மால், நுவான் பிரதீப் , திரிமான்ன போன்ற சிரேஸ்ட வீரர்களை ஒரேயடியாக ஓரம்கட்டி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தீர்மானித்தது.
ஆனாலும் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல பலத்த போராட்டத்திற்கு மத்தியில் திறமையை மீண்டும் நிரூபித்து சந்திமால் ,நுவான் பிரதீப் ஆகியோர் இலங்கையின் தேசிய குழாமுக்கு நுழையும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.
SLC T20 லீக் என நடத்தப்படுகின்ற 4 அணிகளுக்கிடையிலான 20-20 போட்டிகளில் சந்திமால் காட்டிய திறமையின் அடிப்படையில் மீண்டும் அணிக்குத் தேர்வாகி இருக்கின்றமை பாராட்டக்கூடிய விஷயம் .
தென்னாபிரிக்க ,இலங்கை அணிகளுக்கிடையிலான தொடர் செப்டம்பர் மாதம் 2ம் திகதி முதல் 14 ம் திகதிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் இறுதி அணியிலும் சந்திமால் இடம் பிடிப்பார் என நம்பலாம்.
தென்னாப்பிரிக்கா ஒருநாள் மற்றும் டி 20 தொடருக்கான உத்தேச அணி:
தசுன் ஷானக, குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, பானுகா ராஜபக்ச, தனஞ்சய டி சில்வா, பத்தும் நிசங்க, சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ், மினோத் பானுக, தினேஷ் சந்திமால், அஷேன் பண்டார, வனிந்து ஹசரங்க, சாமிகா கருணாரத்ன, சஹான் ஆர்ச்சிகே, லஹிரு மதுஷங்க (உடற்தகுதிக்கு உட்பட்டவர்), துஷ்மந்த சமீரா, பினுர பெர்னாண்டோ, நுவான் பிரதீப், தில்ஷான் மதுஷங்க, லஹிரு குமார, அகில தனஞ்சய, பிரவீன் ஜெயவிக்ரம, மகேஷ் தீக்ஷனா, புலின தரங்க, ரமேஷ் மெண்டிஸ், லக்ஷன் சந்தகன் தனஞ்சய லக்ஷன், ஷிரான் பெர்னாண்டோ.