தென்னாப்பிரிக்கா தொடரின் போது இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்- புதுதிட்டம் போடும் BCCI..!

தென்னாப்பிரிக்கா தொடரின் போது இந்திய அணியின் பயிற்சியாளராக VVS லக்ஸ்மண்?

தென்னாப்பிரிக்கா T20 தொடர் மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு இரண்டு தனித்தனி அணிகளைத் தேர்ந்தெடுக்கும் என தகவல் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு சுற்றுப்பயணத்திற்கும் இரு அணிகளும் தனித்தனி பயிற்சியாளர்களை வைத்திருப்பார்கள் என்பதை இப்போது அறியமுடிகிறது.

ராகுல் டிராவிட் டெஸ்ட் அணியுடன் இங்கிலாந்து செல்லவுள்ளார். VVS லக்ஸ்மண் இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20 தொடர் மற்றும் அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் T20I தொடருக்கான அணியின் பயிற்சியாளராக இருப்பார்.

இப்போது ஜூன் 24 அன்று பர்மிங்காம் டெஸ்டுக்கு முன்பு லீசெஸ்டர்ஷைருக்கு எதிராக ஒரு பயிற்சி ஆட்டத்தை இந்தியா சந்திக்கிறது. ராகுல் டிராவிட் மற்றும் அணி ஜூன் 15 அல்லது 16 ஆம் தேதி இங்கிலாந்து புறப்படும்.

இந்தியா ,தென்னாப்பிரிக்கா டி20 மற்றும் அயர்லாந்து டி20 போட்டிகளில் இந்திய அணியின் பயிற்சிப் பொறுப்புக்களில் இடம்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று பிசிசிஐயின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய தேர்வாளர்கள் மீண்டும் இரண்டு அணிகளை தேர்வு செய்வார்கள். ஒரு அணி தென்னாப்பிரிக்கா தொடரிலும் மற்றொரு அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் விளையாடும்.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக் குழு, தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியாவுடன் IPL ல் கலக்கிய வீர்ர்களைக் கொண்டு இளம் அணியை தேர்வு செய்யும்.

மற்ற அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும். கடந்த ஆண்டு, இந்தியா, இங்கிலாந்து மற்றும் இலங்கையில் ஒரே நேரத்தில் இரண்டு அணிகள் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

 

இந்த முறை அவர்கள் ஒரே நேரத்தில் விளையாட மாட்டார்கள். மாறாக, ஐபிஎல் வீரர்கள் தென்னாப்பிரிக்கா தொடருக்கான அணியில் இடம் பெறுவார்கள். கேப்டன் ரோஹித் ஷர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் மற்றும் All formats நட்சத்திரங்கள் ஜூன் 15 அன்று இங்கிலாந்துக்கு பயணம் செய்யவுள்ளனர்.

தேர்வாளர்கள் ஏன் இரண்டு அணிகளை தேர்வு செய்கிறார்கள்?

கடுமையான ஐபிஎல் சீசனுக்குப் பிறகு, தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து அனைத்து முன்னணி வீரர்களுக்கும் ஓய்வு அளிக்கப்படும்.

சிறந்த ஐபிஎல் வீரர்களைக் கொண்ட இரண்டாவது வரிசை அணிக்கு ஷிகர் தவான் மீண்டும் கேப்டனாக இருப்பார். ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் உள்ளிட்ட எஞ்சியவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இந்திய அணி ஜூன் 15-ம் தேதி இங்கிலாந்துக்கு பயணமாகிறது.

தென்னாப்பிரிக்கா தொடரில், சஞ்சு சாம்சனைத் தவிர ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் மீண்டும் களமிறங்குவார்கள்.

உம்ரான் மாலிக், மொஹ்சின் கான் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகிய  முகங்களுடன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷான் போன்றவர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இங்கிலாந்து தொடரில், சேதேஷ்வர் புஜாரா மீண்டும் களமிறங்குவார் ஆனால் ரஹானே நீக்கப்பட்டுள்ளார். ஷுப்மான் கில் , ஹனுமா விஹாரி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

ஜூலை 1 முதல் 5 வரை இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்தியா இங்கிலாந்தில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

இரு அணிகளும் மே 23-ம் தேதி மும்பையில் நடைபெறும் தேர்வுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும்.