தென்னாப்பிரிக்க மண்ணில் இருபது-20 தொடரிலும் அசத்தியது பாகிஸ்தான்

தென் ஆப்பிரிக்காவுக்கான சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று நிறைவுக்கு வந்தது .

ஒரு நாள் தொடரை 2 க்கு 1 என்ற அபாரமாக கைப்பற்றிய பாகிஸ்தான் அணி 4 போட்டிகள் கொண்ட T20 தொடரை 3-1 என கைப்பற்றி அசத்தியுள்ளது .

தொடரை தீர்மானிக்கவல்ல இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா 19.3 ஓவர்களில் 144 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 20வது ஓவரின் ஐந்தாவது பந்து வீச்சில் அபார வெற்றியை பதிவு செய்தது .

இதன்மூலம் தொடர் 3-1 என நிறைவுற்றது. அணித் தலைவரான பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் தென்ஆப்பிரிக்காவில் சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.