South Africa – Unlucky ProMax
அதிஸ்டமில்லா அணி தென்னாபிரிக்கா என்று பலரும் சொல்வர்.
உலகக் கிண்ண போட்டிகளுக்கு முன் திறமையை வெளிப்படுத்தி பல வெற்றிகளை பெற்றாலும் உலகக்கிண்ணம் போன்ற Big Matches வரும்போது SA பலமுறை சொதப்பி இருக்கிறது. / துரதிஷ்டம் துரத்தி இருக்கிறது.
அதில் உச்சக்கட்டம் தனது சொந்த நாட்டில் நடந்த 2003 உலகக்கிண்ண ஒருநாள் போட்டியின்போது மழை குறுக்கிட ஆரம்பிக்கிறது. டக்வத் லூயிஸ் முறையில் வெற்றிபெற இந்த Over முடிவில் 229 ரன்கள் தேவை என்ற செய்தி தலைவர் பொல்லக் மூலம் துடுப்பெடுத்தாடும் Mark Boucherக்கு அனுப்பப்படுகிறது. (அந்த Paper ஓடு Nikki Boje மைதானத்துக்குள் ஓடிவருவது இன்னும் கண் முன்னே இருக்கிறது.)
Overஇன் 5வது பந்து முத்தையா முரலீதரன் வீச Mark Boucher Six அடிக்கிறார். ஓட்டங்கள் 229. Mark Boucher கைகளை உயர்த்தி வெற்றியை வெளிப்படுத்துகிறார்.
ஆனால் பார்வையாளர்களுக்கு TV திரையில் தெரிகிறது வெற்றிபெற இன்னும் ஒரு ஓட்டம் தேவை. Boucherக்கு தகவல் சொல்ல முடியவில்லை.
முரலீதரனின் 6வது பந்து விக்கெட்டை காப்பாற்ற Dot செய்கிறார். (விக்கட் போனால் D/L முறையில் மாற்றம் வந்து தோல்வியாவதை தடுக்க.)
மழை கடுமையாகிறது. Umpires ஆட்டத்தை நிறுத்துகின்றனர்.
மறுபடி மைதானத்துக்குள் தகவல் வருகிறது டக்வத் லூயிஸ் முறையில் வெற்றிபெற இன்னும் ஒரு ஓட்டம் தேவை.
மழை நிற்கவில்லை. தென்னாபிரிக்காவின் கண்ணீர் மழை.
Miss Communicationஆல் தன் சொந்த நாட்டில் நடந்த உலகக்கிண்ண போட்டியில் அரையிறுதி வாய்ப்பையே இழந்தது SA.
1992 உலகக் கிண்ணம்: இங்கிலாந்துடனான தென்னாபிரிக்காவின் அரை இறுதிப்போட்டி. 13 பந்துகளில் 23 ஓட்டங்கள் தேவை. தென்னாபிரிக்காவின் Momentumஐ பார்த்து வர்ணணையாளர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இதனை இலகுவாக அடைவார்கள் என்று.
மழை குறுக்கிடுகிறது. சனியன் டக்வத் லூயிஸ் உள்ளே வாரான். முதலில் 7 பந்துகளுக்கு 22 ஓட்டங்கள் என்றார்கள். பின்னர் இல்லை ஒரு பந்துக்கு 22 ஓட்டங்கள் என்று அறிவிக்கப்படுகிறது.
என்னது 13க்கு 23ல இருந்து 1க்கு 22ஆ? Oh Boy இது லூயிஸ் ஆ இல்ல லூசா?
Rest is History.
1999 உலகக் கிண்ணம் அரை இறுதிப் போட்டி:
சாத்தியமே இல்லாத இலக்கை துரத்தி வருவிர் Lance Klusenner. வெற்றி தென்னாபிரிக்காவின் கைகளுக்குள் வந்துவிடும். இறுதி Over இறுதி விக்கட் இரண்டு ஓட்டங்களே தேவை. துடுப்பெடுத்தாடுபவர் அதே Man of the Match – Lance Klusener. ஒரு ஓட்டத்தை பெற தடுமாறி Run Out ஆகி தோல்வி அடைய Australia இறுதிப் போட்டிக்குள் நுழைகிறது. Rest is History.
இன்றைய Zimbabwe உடனான Hobart மைதான போட்டி Toss போட்டு இன்னும் ஒரு பந்துகூட வீசப்படாமல் மழையால் தடைப்பட்டு நிற்கிறது. சில ஓவர்களாவது விளையாடலலாமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சிம்பாபே கூட இலகுவாக பெறக்கூடிய இரு புள்ளிகள், NRRஐ உயர்த்தக்கூடிய வாய்ப்பு SAக்கு கைநழுவிப்போகலாம்.
Group 2ஐ பொறுத்தவரை IND, PAK, SA மூவரில் இருவருக்கே அரையிறுதி செல்லும் வாய்ப்பு உள்ளது என அனுமானங்கள் சொல்கின்றன.
மழை முக்கிய பங்கு ஆற்றும்போல்தான் தோன்றுகிறது.
பி.கு: போட்டி தற்போது 9 Overs ஆக மட்டுப்படுத்தப்பட்டு ஆரம்பித்துள்ளது.
Zimbabwe 9 Over களில் 79/5
1.1 Overs South Africa 23/0 again Rain.
ஆட்டம் மீண்டும் Target 64 for 7 Overs.
3 Overs 51/0 மீண்டும் மழை.
D/L அமுல்ப்படுத்த குறைந்தது 5 overs வீசப்பட்டிருக்க வேண்டும்.
Points Shared.
🙏🙏🙏🙏🙏
via – Ziyad Aia