தென் ஆபிரிக்க இளையோர் அணியில் பிளசிஸ் , டீ வில்லியேர்ஸ்…!

தென்ஆப்பிரிவுக்காவுக்கு ஏறக்குறைய இன்னொரு டூபிளிஸிசும் டிவிலியர்சும் கிடைத்தே விட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்!

தென்ஆப்பிரிக்க U19 ஆண்கள் கிரிக்கெட் அணியில் இவர்களைப்போலவே ஆடும், பெரிய ஸ்கோர்களை குவிக்கும் இருவீரர்கள் இருக்கிறார்கள்.

டூபிளிஸசை போலவே ஆடும் கேப்டன் George van Heerden.


டிவிலியர்சை போலவே ஆடும் ஒன்டவுன் பேட்ஸ்மேன் Dewald Brevis.

இருவருமே நடக்கும் உலகக்கோப்பைத் தொடரில் ஒரு சதமடித்திருக்க, இவர்களது ஷாட்ஸ் செலக்சன், ஷாட்ஸ் நேர்த்தி, இன்னிங்ஸை பில்ட் பண்ணுவது என ஆட்டத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது.

எல்லாம் தாண்டி டூபிளிசஸ் டிவிலியர்ஸை சமீபத்தில் இழந்திருந்த தென்ஆப்பிரிக்க அணிக்கே அவர்களின் ஆட்டச்சாயலில் ஆடுபவர்கள் கிடைத்ததில்லாமல் அவர்களைப் போலவே பெரிய இன்னிங்ஸ் ஆடும் வீரர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமாய் அதேவேளையில் சந்தோசமாகவும் இருக்கிறது.

டிவிலியர்சும் டூபிளிசும் இப்படி ஒன்றாய் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடிவர்கள்தான் நண்பர்களும் கூட. டிவிலியர்ஸ்க்கு வாய்ப்பு முன்கூட்டியே கிடைத்துவிட, இங்கிலாந்துக்கு விளையாடும் வாய்ப்புகளை நிராகரித்து, தென்ஆப்பிரிக்க அணிக்காகத்தான் விளையாடுவேன் என்று உறுதியாய் நின்று, இளம்வயதில் ஒன்றாய் விளையாடிய டீம்மேட்க்கு, தன் நண்பனான டிவிலியர்ஸ்க்கு கூல்டிரிங்ஸ் தூக்கி, எல்லாம் பொறுத்துச் சகித்துக் காத்திருந்து அணிக்குள் வந்து சாதித்தவர் டூபிளிசஸ்.

இவர்களில் யாருக்கும் காலம் இப்படியொன்றை நிகழ்த்தாமல் வாய்ப்பை சீக்கிரத்தில் ஒரேநேரத்தில் வழங்கி சாதிக்க வைக்கட்டும்!

Richards