தென் ஆபிரிக்க தொடர் பிற்போடப்பட்டது- அவுஸ்திரேலியா அறிவிப்பு.

 

அவுஸ்திரேலிய மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் பிற்போடப்பட்டுள்ளதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

மார்ச் மாதம் 3 ம் திகதி ஆரம்பிக்கவிருந்த 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் கொரோனா அச்சம் காரணமாகவே பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் மோதும் கனவுடன் காத்திருக்கும் டிம் பெயின் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கு இந்த தொடர் பிற்போடப்படுகின்றமை பலத்த அடியாக அமையவுள்ளது.

ஜூன் மாதம் இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ள ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிரு இடங்களில் இருக்கும் அணிகள் மோதும் என்பதும் கவனிக்கத்தக்கது.

நியூசிலாந்து, இந்திய அணிகள் இதுவரைக்குமான போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் முதலிரு இடங்களில் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.