தென் ஆபிரிக்க T20 லீக்கில் விளையாட 3 இலங்கை வீரர்கள் இணைக்கப்பட்டனர்..!

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ள SA20 போட்டிக்கான வீரர்கள் ஏலம் நேற்று கேப்டவுனில் நடைபெற்றது. இந்த வீரர்கள் ஏலத்தில் 30 இலங்கை வீரர்கள் உட்பட உலகம் முழுவதும் இருந்து 533 வீரர்கள் பதிவு செய்யப்பட்டனர்.

நேற்று நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில், மும்பை கேப்டவுன் அணி சார்பில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹேல ஜெயவர்த்தன இணைந்தார்.

இலங்கை இருபதுக்கு 20 தொடக்க வீரர் குசல் மெண்டிஸ் எதிர்வரும் SA20 போட்டியில் விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வீரர்கள் ஏலத்தின் இரண்டாவது சுற்றில் குசல் மெண்டிஸை 425,00 தென்னாப்பிரிக்க ராண்டுக்கு வாங்க பிரிட்டோரியா கேபிடல்ஸ் முடிவு செய்தது. இது IPL போட்டிகளின் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு சொந்தமான அணியாகும்.

குசல் மெண்டிஸைத் தவிர, இளம் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுசங்கவும் டேர்பன் சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார். இது IPL தொடரில் பங்கேற்கும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு செந்தமான அணியாகும்.

ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக மகேஷ் தீக்ஷனவை தங்கள் அணியில் சேர்த்தனர். இதனடிப்படையில் குசல் மெண்டிஸ், டில்ஷான் மதுசங்க, மகேஷ் தீக்ஷன ஆகிய இலங்கை வீரர்கள் எதிர்வரும் தென்னாப்பிரிக்க லீக்கில் விளையாட அனுமதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.