தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவர் பாவுமாவை வேண்டுமென்றே இலங்கை வீரர்கள் காயப்படுத்தினரா ? தொடரிலிருந்து வெளியேறுகிறார்..!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவர் பாவுமாவை வேண்டுமென்றே இலங்கை வீரர்கள் காயப்படுத்தினரா ? தொடரிலிருந்து வெளியேறுகிறார்..!

இலங்கை சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் நேற்று ஆரம்பித்தது.

ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் தலைவர் தெம்பா பாவுமா உபாதை காரணமாக இந்த தொடரில் இருந்து முழுவதுமாக விலகுவதாக தென்னாபிரிக்க கிரிக்கட் சபை அறிவித்தது.

நேற்றைய போட்டியில் இலங்கை வீரர்கள் பாவுமாவை வேண்டுமென்றே உபாதைக்குள்ளாக்கினார்களா எனும் சந்தேகத்தையும், கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.

இப்போதைய நிலை தென் ஆப்பிரிக்க அணியின் புதிய தலைவராக சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மஹராஜ் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

பாவுமா எப்படி காயமடைந்தார்?

இரண்டாவது இன்னிங்ஸின் 26 வது ஓவரில் தென்னாப்பிரிக்கா 301 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடும்போது போட்டியை முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

டெம்பா பாவுமா, பந்து வீச்சாளர் தனஞ்சய டி சில்வா, ஒரு சுலபமான சிங்கிளைத் தடுக்க டைவிங் முயற்சியில் இறங்கி பந்தை லெக் சைடில் தள்ளினார்.

31 வயதான பாவுமா தனது கிரீஸுக்குள் பாதுகாப்பாக திரும்பினார், ஆனால் வனிந்து ஹசரங்கா பந்தை எடுத்து  தென்னாப்பிரிக்க கேப்டனை நோக்கி நேராக எறிந்தார் .

 

பந்து அவரைத் தாக்குவதைத் தடுக்கும் முயற்சியில், பாவுமா தனது வலது கையை நீட்டி தடுக்க முற்பட்டபோது, துரதிருஷ்டவசமாக அவரது வலது கட்டை விரலில் பந்து பட்டது.

அவர் உடனடியாக தனது பேட்டை வீசிவிட்டு, கையுறைகளை கழற்றி, அவர் மிகவும் வலியுடன்  பிசியோவை அழைத்தார்.

அவர் பேட்டிங் தொடர முயற்சித்த போதிலும், அவர் இரண்டு ஓவர்கள் கழித்து மைதானத்தை விட்டு வெளியேறும் நிலை உருவானது, இப்போது அவரது உபாதை இலங்கை தொடரையே தவறவிடும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

அவிஷ்க பெர்னாண்டோ துடுப்பெடுத்தாடி கொண்டிருந்தபோது களத்தடுப்பில் ஈடுபட்ட பாவுமா இதேபோன்று அவிஸ்கவை குறிவைத்து எறிந்த பந்து அவரை தடுமாற செய்தது.

வேண்டுமென்று எறியப்படாவிட்டாலும் கூட , அதற்கு பதிலடியாக ஹசரங்கவும் வேண்டும் என்று எறியாவிட்டாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக எறிந்த பந்து இப்போது பாவுமாவை தொடரை விட்டே வெளியேற்றியிருக்கிறது.