தென் ஆப்ரிக்க தொடரில் இலங்கை அணி எதிர்கொண்டு மிகப்பெரிய சிக்கல் என்ன தெரியுமா ?

தென் ஆப்ரிக்க தொடரில் இலங்கை அணி எதிர்கொண்டு மிகப்பெரிய சிக்கல் என்ன தெரியுமா ?

இலங்கை சுற்றுலாவை மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டுவென்டி டுவென்டி தொடரில் இலங்கை அணி மோசமான பின்னடைவை சந்தித்தது.

இந்த பின்னடைவுக்கான பிரதானமான காரணம் என்ன என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

 

குறிப்பாக இலங்கை அணி அவர்கள் T20 போட்டிகளில் அதிக Dot Ball களை விட்டுக்கொடுத்ததே இலங்கையின் பின்னடைவுக்கு பிரதானமான காரணம் எனலாம்,

இலங்கை அணி இந்த தொடரில் எதிர்கொண்ட மொத்தம் 349 பந்துகளில் 150 பந்துகளை இவர்கள் Dot Ball களாக தவறவிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்காக வீசப்பட்ட பந்துகளில் 43 வீதமானவை ஓட்டம் எதுவும் பெறப்படாத பந்துகளாக அமைந்தமை இங்கே மிகப் பெரும் வேதனைக்குரிய விடயமாகும்.

1 வது T20- 49 Dot Balls

2 வது T20 – 51 Dot Balls

3 வது T20- 50 Dot Balls

இதையும் தாண்டி இலங்கையின் மூன்று நட்சத்திர வீரர்களும் இந்த தொடர் முழுவதுமாகவே சோபிக்க தவறினர், குறிப்பாக அணித்தலைவர் தசுன் ஷானக உதவி தலைவர் தனஞ்சய டீ சில்வா அதுமாத்திரமல்லாமல் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும் சகலதுறை ஆட்டக்காரருமான ஹசரங்க ஆகிய மூவரும் இந்த தொடர் முழுவதும் சோபிக்க தவறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

DDS _6 ஓட்டங்கள்

ஹசரங்க_8 ஓட்டங்கள்

ஷானக -44 ஓட்டங்கள்

 

இந்த தொடர் முழுவதுமாக இவர்களுடைய துடுப்பாட்ட பங்களிப்பு மோசமானதாகவே காணப்பட்டது. இதனால் 3 வது போட்டியில் இலங்கை 120 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

பதிலுக்கு 121 எனும் இலக்கோடு துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி எதுவிதமான விக்கட்டுக்களையும் இழக்காது 10 விக்கெட்டுகளால் போட்டியில் வெற்றி பெற்றது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் குயின்டன் டி கொக் ஆகியோர் மிகச்சிறப்பாக 121 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து 32 பந்துகள் மீதமிருக்க போட்டியில் வெற்றியை தேடிக் கொடுத்தனர்.

இதன் மூலமாக தென் ஆபிரிக்க அணி தொடரை 3-0 என கைப்பற்றியது.