தெறிக்கவிடும் சிஎஸ்கே வீரர் ரச்சின்.. இந்த ஐபிஎல் சென்னைக்கு தான்..மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தெறிக்கவிடும் சிஎஸ்கே வீரர் ரச்சின்.. இந்த ஐபிஎல் சென்னைக்கு தான்..மகிழ்ச்சியில் ரசிகர்கள்

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த தொடர் தான் தோனிக்கு கடைசியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறாவது முறையாக சிஎஸ்கே அணி கோப்பையை வென்று தோனியை வெற்றியுடன் வழி அனுப்புமா என்பதுதான் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.

இந்த சூழலில் ஐபிஎல் தொடருக்கு இரண்டு வாரமே உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ரச்சின் ரவீந்திரா மற்றும் பந்துவீச்சில் எதிரணியை சுளுக்கு எடுத்து வருகிறார்.

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக ரச்சின் ரவீந்திரா சதம் அடித்திருக்கின்றார். இதேபோன்று பந்துவீச்சிலும் ரச்சின் ரவீந்திரா இந்த தொடரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ரன்களையும் கட்டுப்படுத்தி இருக்கிறார். இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்ததற்கான தொடர் நாயகன் விருதையும் ரச்சின் ரவீந்திரா பெற்றிருக்கிறார்.

இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலமாக ரச்சின் ரவீந்திரா மாறி இருக்கிறார்.கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக ரவீந்திரா 10 போட்டியில் விளையாடி மொத்தமாக 222 ரன்கள் தான் அடித்திருந்தார். ஆனால் இந்த சீசனில் ரச்சின் ரவீந்திரா பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று ஐசிசி தொடரில் ரச்சின் இதுவரை 5 சதம் அடித்திருக்கிறார். இதன் மூலம் தாம் அடித்த முதல் 5 சதமுமே ஐசிசி தொடரில் தான் என்ற மகத்தான சாதனையை ரச்சின் படைத்திருக்கிறார். இதற்கு முன் எந்த ஒரு வீரரும் தங்களுடைய முதல் ஐந்து சதத்தை ஐசிசி தொடரில் அடித்ததில்லை.

சிஎஸ்கே அணிக்காக ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட்டுடன் தொடக்கத்தில் களமிறங்கி பெரிய இன்னிங்ஸை சிஎஸ்கே அணிக்காக ஆடுவார் என எதிர்பார்க்கலாம். மேலும் பந்து வீச்சிலும் ரச்சின் தனது திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு இருக்கிறது.

Previous articleஒரு அணியின் மொத்த முயற்சி 🇮🇳🏆
Next articleஆட்டநாயகன்கள் இருவர்..!