தெற்காசிய கால்பந்து திருவிழா- போராடி தோற்றது இலங்கை கால்பந்து அணி..!
தெற்காசிய நாடுகளுக்கு இடையில் இடம்பெறும் தெற்காசிய கால்பந்து போட்டிகளில் நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியது.
மாலை தீவில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் இலங்கை கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் 0-1 என தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.
இறுதி வரைக்கும் இரு அணிகளும் முட்டி மோதி ஆக்ரோஷமாக விளையாடினர், இலங்கை அணியால் ஒரு கோலையும் பெற்றுக்கொள்ள தவறிவிட்டது.
சுஜான் பெரேரா தலைமையில் விளையாடிய இலங்கை கால்பந்து அணி மிகச் சிறப்பாக விளையாடினாலும் கூட, போட்டியில் மத்தியஸ்தருடைய தவறான தீர்ப்பே போட்டியில் இலங்கையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இலங்கை அணிக்கு எதிராக வழங்கப்பட்ட பெனால்டி, போட்டியில் இலங்கை அணி ஒரு கோலை வாங்குவதற்கு காரணமாக அமைந்தது. அந்த பெனால்டி உதை சரியானதா தவறானதா என விமர்சனங்கள் ரசிகர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றமையும் கவனிக்கத்தக்கது.
புகைப்படங்கள் இணைப்பு ???