கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தெற்காசிய கால்பந்து சம்மேளனம் (SAFF) Suzuki Cup 2021 கால்பந்தாட்ட போட்டி செப்டம்பர் 14 முதல் 25 வரை பங்களாதேஷின் டாக்காவில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெற உள்ளது.
இது முன்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் 19 முதல் 30 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக குறித்த தொடர் பிற்போடப்பட்டது.
SAFF செயற்குழு அதன் ஏழு உறுப்பு நாடுகளுடன் Zoom தொழில்நுட்பம் வழியாக நடத்திய கூட்டத்தைத் தொடர்ந்து புதிய தேதிகள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
சாஃப் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலத்தீவு மற்றும் பாகிஸ்தான் ஆகியவை பங்கேற்றன.
இலங்கை அணி சார்பில் போட்டியில் பங்கேற்க 22 பேர் கொண்ட தேசிய கால்பந்து குழாம் தற்போது பயிற்சியில் உள்ளது.
இந்தியா ஏழு சந்தர்ப்பங்களிலும், மாலத்தீவிலும் ஒரு முறையும் கிண்ணம் வென்றுள்ளன .1993 ல் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை இந்த போட்டியை 1995 ம் ஆண்டில் கொழும்பில் இந்த தொடர் நடத்தப்பட்டபோது வென்றது, 26 ஆண்டுகளுக்குப் பிறகு சாஃப் கிண்ணத்தை வெல்வதற்கான தீவிர முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டுள்ளது.