தேசிய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் FAZAL இன்று முதல் சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு..!

தேசிய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் FAZAL இன்று முதல் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மதிப்புமிக்க FIFA தொடர்-2024 இல் ஃபசல் தனது கடைசி சர்வதேச ஆட்டத்தை பூட்டானுக்கு எதிராக இன்றைய தினம் விளையாடுகிறார்.

ஃபசல் 2008 முதல் 2024 வரை மூத்த தேசிய அணியில் உறுப்பினராக இருந்தார். அவர் 2018 – 2019 இல் தேசிய அணியின் கேப்டனாக இருந்தார். ஃபசல் தனது ஓய்வை அறிவிப்பதற்கு முன்பு 53 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

FFSL தலைவர், செயற்குழு, பயிற்சி ஊழியர்கள், ரசிகர்கள் மற்றும் முழு கால்பந்து குடும்பத்தினரும், இலங்கை கால்பந்தாட்டத்திற்கு FAZAL இன் சிறப்பான பங்களிப்பிற்காக நன்றி தெரிவிக்கின்றனர்.

#SriLankaFootball #SriLanka #football #FIFA #FIFAseries #footballforward #thepeoplesgame #Fazal #retirement