வங்களாதேஷ் கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்ட இலங்கை அணிக்கும், வங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நிறைவுக்கு வந்திருக்கிறது.
இந்த தொடரில் இலங்கையின் இளம் வீரர்கள் பலர் தேர்வாளர்களுக்கு ஏமாற்றம் கொடுத்திருக்கிறார்கள் என்பது ரசிகர்களுக்கு கவலையானதே.
இதனடிப்படையில் 22 வயதான இளம் வீரரான பத்தும் நிஷ்ஷங்க 3 போட்டிகளில் விளையாடி 28 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டார், உதவி தலைவர் குசல் மெண்டிஸ் 3 போட்டிகளில் விளையாடி 61 ஓட்டங்களை பெற்றிருக்கிறார்.
அதே நேரத்தில் ஆரம்ப வீர்ர் தனுஷ்க குணதிலக்க 3 போட்டிகளில் 84 ஓட்டங்களை குவித்தநிலையில் கடந்த மேற்கிந்திய தீவுகள் தொடரில் நம்பிக்கை கொடுத்த அசேன் பண்டார இரண்டு போட்டிகளில் 18 ஓட்டங்களை பெற்றிருக்கிறார்.
இதன் அடிப்படையில் இலங்கையின் குறித்த இளம் வீரர்கள் தமக்கான வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்த தவறியிருக்கிறார்கள் எனும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
அடுத்து இலங்கை அணி இங்கிலாந்து நோக்கி புறப்படத் தயாராகும் நிலையில், குறித்த இளையவர்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்படுமா எனும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றமை நியாயமானதே .