தேவபுரம் கஜமுகன் விளையாட்டு கழகத்தினரின் கிரிக்கட் தொடர்

 

தேவபுரம் கஜமுகன் விளையாட்டு கழகத்தினால் 5வது முறையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சசிந்திரன் ஞாபகார்த்த வெற்றிகிண்ண கிரிக்கெட் தொடரின் ஆரம்ப நிகழ்வான வெற்றிகிண்ணம் மற்றும் அணித்தலைவர்கள் அறிமுக நிகழ்வு 27.01.2021 அன்று எமது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் கோறளைப்பற்றுத் தெற்கிற்கான பிராந்திய இணைப்பாளர் மற்றும்  கஜமுகன் விளையாட்டு கழகத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், நிருவாக சபை உறுப்பினர்கள், முறக்கொட்டான்சேனை வுளுஸ்டார் மற்றும் இளஞ்சுடர் விளையாட்டு கழகத்தினர் தலைவர்கள், தொடரின் 12 அணித்தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தகவல் -தேவபுரம் கஜமுகன் விளையாட்டு கழகம்