தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கிங் கோலி…!
இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது, ஒருநாள் அணி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதால் அவர் அதிருப்தியுடன் இருப்பதாக இந்திய ஊடகங்களும் ,சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வந்தன.
மேலும் ரோகித் சர்மா- விராட் கோலி இடையே மோதல் போக்கு இருப்பதால் டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியதாகவும், ஒருநாள் தொடரை விராட் கோலி புறக்கணிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிருப்திநிலையை உருவாக்கியிருந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மொதமேது அஸாருதீனும் இந்த நிலைப்பாடு தொடர்பில் சந்தேகம் எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவுக்க எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தான் விளையாடவுள்ளதாக தெரிவித்து முன்னர் வந்த வதந்திகள் எல்லாவற்றுக்கும் கோலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆயினும் தலைமைத்துவ பறிப்பு தொடர்பில் தன்னிடம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் கோலி தனது அதிருப்தி நிலையை வெளிப்படுத்தியுள்ளார்.