தொடக்க வீரராக ரோகித் சர்மா படைத்த சாதனைகளின் பட்டியல்..!

ரோஹித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 11,000 ரன்களைப் பூர்த்தி செய்துள்ளார்

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று தனது ஆட்டத்தைத் தொடர்ந்த ரோஹித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 11,000 ரன்களைப் பூர்த்தி செய்துள்ளார். 246 இன்னிங்ஸில் இந்த இலக்கை எட்டியுள்ளார். குறைந்த இன்னிங்ஸில் 11,000 ரன்களை எடுத்த தொடக்க வீரர்களில் 2-ம் இடம். தொடக்க வீரராக 241 இன்னிங்ஸில் 11,000 ரன்களை எடுத்து முதலிடத்தில் உள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

சர்வதேச கிரிக்கெட்டில் குறைவான இன்னிங்ஸில் 11,000 ரன்கள்

சச்சின் – 241 இன்னிங்ஸ்
ரோஹித் சர்மா – 246 இன்னிங்ஸ்

34 வயது ரோஹித் சர்மா, 11,000 ரன்களை எடுத்த வீரர்களில் அதிக பேட்டிங் சராசரியைக் கொண்டுள்ளார். 49.31*. தொடக்க வீரராக அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஜெயசூர்யா முதல் இடத்தில் உள்ளார். 563 இன்னிங்ஸில் 19,298 ரன்கள் எடுத்துள்ளார்.

தொடக்க வீரராக ரோஹித் சர்மா எடுத்த சதங்கள் – 35

டெஸ்ட் – 4
டி20 – 4
ஒருநாள் – 27

2009-ல் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக முதல்முறையாகத் தொடக்க வீரராகக் களமிறங்கினார். 2013 முதல் நிரந்தரமாகத் தொடக்க வீரராகக் களமிறங்கி வருகிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த தொடக்க வீரர்கள்

கெய்ல் – 527 சிக்ஸர்கள்
ரோஹித் சர்மா – 364 சிக்ஸர்கள்

இங்கிலாந்து உடனான 4வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த ரோகித் சர்மா தன்னுடைய 8 வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

இது மாத்திரமல்லாமல் இங்கிலாந்து மண்ணில் ஆரம்ப வீரராக அனைத்து வகையான போட்டிகளிலும் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் ரோகித் சர்மாவிற்கு கிடைத்தது.

8 சதங்கள் அடித்துள்ள ரோகித் சர்மா வெளிநாட்டு மண்ணில் அடித்த முதலாவது சதமாகவும் இந்த சதம் பதியப்பட்டது.

ABDH