தென் ஆப்பிரிக்காவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் , தென் ஆபிரிக்க அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணிக்கு அணித்தலைவர் பாபர் அசாம், பஹ்கர் சமான் ஆகியோர் கைகொடுக்க 7 விக்கெட்களை இழந்து 320 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு ஆடிய தென் ஆபிரிக்க அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 292 ஓட்டங்களை மட்டுமே பெற்று 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி தொடரை 2-1 என்று கைப்பற்றியது.