தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது அவுஸ்திரேலியா, இலங்கை அணி ஏமாற்றியது…!

தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது அவுஸ்திரேலியா, இலங்கை அணி ஏமாற்றியது…!

அவுஸ்திரேலியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நிறைவுக்கு வந்தது.

இந்த போட்டியில் டக் வோர்த் லூயிஸ் முறையில் அவுஸ்திரேலிய அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

இன்றைய முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, ஆஸ்திரேலியாவை துடுப்பாட பணித்தது, இதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
லீக் போட்டிகளில் கலக்கிய பென் மாக்டெமோட் 53 ஓட்டங்களையும் மார்க்கஸ் ஸ்டோனிஸ் 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் பணிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீரா, பினுரா பெர்னாண்டோ, 2 சாமிக கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

150 எனும் இலக்குடன் ஆடிய இலங்கை அணி மழை காரணமாக 19 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, அணி சார்பில் பத்தும் நிஸ்ஸங்க 36 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் அட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ஹெஸ்செல்வூட் 4 விக்கெட்டுக்களையும், ஆடம் சம்பா 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருதுக்கு சம்பா தேர்வானார்.

தொடரின் 2 வது போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 13 ம் திகதி இடம்பெறவுள்ளது.